யோகா: ஓகம்


ஒரு குறிப்பிட்ட வடிவத்தை ஒக்க (போல) உடலை வைத்து நிற்பது அல்லது இருப்பது ஒக்க நிலை அல்லது ஓகநிலை அல்லது யோகா எனப்படும்.
அடிப்படையில் யோகா என்பது எட்டுவிதமான செயல்பாடுகளில் ஒன்று என்றாலும், ஒரு சிகிச்சை முறையாகவே யோகாவை இங்கே குறிப்பிடுகிறேன். அதாவது மருத்துவ முறையிலான ஒரு உடற்பயிற்சியாகவே யோகாவை இங்கே குறிப்பிடுகிறேன்.
யோகா ஒரு உடற்பயிற்சி:
உடற்பயிற்சிகள் பல விதமாக உள்ளன. ஓடுவது, நீச்சல் அடிப்பது, பளுதூக்குவது, விளையாடுவது என பலவிதமான உடற்பயிற்சிகள் இருந்தாலும், உடல் உள் உறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு சிறந்த உடற்பயிற்சியாக யோகாவை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட உடல் உள் உறுப்புக்கு ஒரு குறிப்பிட்ட யோகாசனம் நல்லது என பரிந்துரை செய்யும் அளவிற்கு சிறப்பு யோகாசனங்கள் உள்ளன.
அதேபோல ஒரு குறிப்பிட்ட நோய்க்கு சிறந்த ஆசனம் என பரிந்துரை செய்யும் விதத்திலும் ஆசனங்கள் உள்ளன.
அதே போல அனைவரும் தினமும் ஒரு உடற்பயிற்சியாக யோகா செய்து வருவது அநேக நன்மைகளை உடலுக்குக் கொடுக்கும்.
யாரிடம் யோகா கற்றுக்கொள்ளலாம்?
B.S.M.S
B.A.M.S
B.N.Y.S
போன்ற இந்திய முறை மருத்துவம் பயின்ற மருத்துவர்களின் ஆலோசனையுடன் அல்லது அவர்கள் மேற்பார்வையில் யோகா கற்றுக் கொள்வது நல்லது.
