சித்த மருத்துவம்

Main Menu

  • முதல் பக்கம்
  • டாக்டரை பற்றி
  • சித்தா பற்றி
  • சர்க்கரை நோய்
  • நோய்கள்
  • நோய் தடுப்பு
  • முகவரி
  • புத்தகம்

logo

Header Banner

சித்த மருத்துவம்

  • முதல் பக்கம்
  • டாக்டரை பற்றி
  • சித்தா பற்றி
  • சர்க்கரை நோய்
  • நோய்கள்
  • நோய் தடுப்பு
  • முகவரி
  • புத்தகம்
  • முகப்பரு

  • என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

  • சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

  • மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

  • கல்லீரல் நோய்கள்

நோய்கள்
Home›நோய்கள்›உலகையே பாடாய்ப் படுத்தும் உடல் உறுப்பு

உலகையே பாடாய்ப் படுத்தும் உடல் உறுப்பு

By Dr. JEROME XAVIER
September 5, 2018
1887
0
Share this:

மூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர். இந்த உலகத்தில் தோல் ஏற்படுத்திய சிக்கல் எவ்வளவோ, அதைவிட
தன் அமைப்பிலும் செயல்பாட்டினாலும் சிக்கலான உறுப்பு தோல். அதனால்தான் தோலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை எவ்வித தயக்கமுமின்றி என்னால் சொல்ல முடியும். நவீன மருத்துவத்தில்
தோல் நோய்கள் பற்றிய அநேக கேள்விகளுக்கு விடை இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணமாக, அரிப்பு எனும் உணர்வு எப்படி ஏற்படுகிறது என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது.

கரப்பான் ஏன் வருகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் கிடையாது (Eczema). இப்படி, ‘idiopathic’ அதாவது காரணம் இல்லாமல் வருகின்ற நோய்கள் என நிறைய நோய்கள் நவீன மருத்துவத்தில்
விளக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் நவீன மருத்துவத்தை குறைசொல்வதற்காகக்
கூறவில்லை. தோல், கல்லீரல் போன்ற சிக்கலான அமைப்புகளையுடைய றுப்புகளில் அந்தப் பகுதி சார்ந்த மருத்துவம் பலன் தராது(Localised). மாறாக முழுமையான ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது (Holistic). இந்த முழுமையான அணுகுமுறைதான் சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் பயன்படுகிறது. எனவேதான் தோல்நோய்களில் சித்த
மருத்துவமே நிரந்தரத் தீர்வைத் தருகிறது. ஏன் இவைகளுக்கெல்லாம் இன்றும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், எல்லாவற்றையுமே நுண்ணோக்கி மூலம் பார்த்து அல்லது
ஆய்வகத்தில் சோதனை செய்து பார்த்து விடை தேடுவது நவீன மருத்துவத்தின் இயல்பு. ஆனால் கண்ணுக்குத் தெரியாத உடல் இயக்கங்களான 10 விதமான வாயுக்களின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளே தோல் நோய்களுக்குக் காரணம் என சித்த மருத்துவம்
விளக்குகிறது. இதை நவீன மருத்துவ முறையிலும் கூட விளக்கலாம். அதாவது கரு
உற்பத்தி ஆகும்போது,Ectoderm, Endoderm, Mesoderm என மூன்று பகுதிகளாக உடல் உருவாகிறது. இதில் நரம்புக் கூட்டமும் தோலும். நரம்புகள் என்பவைகளில்தான் வாதம் எனும் வாயுக்களின் செயல்பாடு உள்ளது. மனதும் வாயுக்களின் செயல்பாடு உள்ள பகுதிதான் (பிராணன் எனும் வாயுவின் இயக்கமே மனதின் இயக்கம்). மனதில் ஏற்படும் பிரச்னைகளும் தோல் நோய்களைத் தூண்டிவிடும்.

தோல் நோய்களுக்கான சிகிச்சையின் அடிப்படை:

சித்த மருத்துவத்தில் அரிப்புக்கு ஒரு மருந்து, தடிப்புக்கு ஒரு மருந்து என தனித்தனியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. தோல் நோய்கள் உடலின் சாரம் (திரவப்பகுதி), இரத்தம், தசை ஆகிய மூன்றையும் பாதிப்பதால் இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய மருந்துகளையும், உடல்
தாதுக்களை வலிமைப்படுத்தக்கூடிய மருந்துகளையும் அடிப்படையாகக் கொண்டும், மேலும் அந்த குறிப்பிட்ட நோய் எதனால் உண்டாகிறது என்ற அடிப்படையிலும் மருத்துவம் செய்யப்படுகிறது. மேலும் சிறு பூச்சிகள் மற்றும் வண்டுகளின் கடியினாலும் மற்றும் கிருமிகளாலும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன என சித்த மருத்துவத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தோல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள் உள்ளன?
1. முகப்பரு
2.வெண்குட்டம் -Leucoderma
3.சொரியாசிஸ் _(காளாண்ஜகத்தடை)(psoriasis).
4.கரப்பான் –(Eczema)
5.தேமல் –(Tinea)
6.பொடுகு –(Dandruf)
7.சேற்றுப்புண்
8.பித்த வெடிப்பு
9.படுக்கை புண் –(Dandruf)
10.தடிப்பு
11.அரிப்பு
12.தோல் வறட்சி
13.வேர்க்குரு
14. வாய்ப்புண்
15. கால் ஆணி

1. வெண்குட்டம் (வெண்புள்ளி நோய்):
இது தொற்றுநோய் அல்ல. ஒருவருக்கு இந்த நோய் குணமாகுமா, குணமாகாதா என்பதை சித்த மருத்துவ முறையில் கணிக்க முடியும். குணமாகும் என கணிக்கப்பட்டவர்கள் முறையாக மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து முற்றிலும் விடுதலைப் பெறலாம்.
முழுமையாக குணமாகாது என கணிக்கப்பட்டவர்களும் சித்த மருந்தை எடுத்துக் கொள்வதால் இந்நோய் மேற்கொண்டு உடலில் பரவாமல் தடுக்க முடியும். உடலில் தோலின் வெள்ளை நிறப் புள்ளிகளையும் படைகளையும் ஏற்படுத்தும் நோய். இது தோல் நிறமிகளில் ஏற்படும் குறைபாடே.

2. காளாண்ஜகத்தடை (psoriasis):
சொரியாசிஸ் என அழைக்கப்படும் இந்நோய் பல்வேறு காரணங்களால்வருகிறது. இதில் செந்நிற பருக்களும், தடிப்புகளும் உண்டாகும். இவை வெண்மை நிற பளபளப்பான செதில்கள் மூடப்பட்டிருக்கும். சொறிந்தால் இரத்தக் கசிவு ஏற்படலாம். உடலில் படைகள் ஏற்படும் இடங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். சிலருக்கு நகங்களை பாதிக்கும். நகத்தில் சிறு குழிகள் உண்டாகும்.
இந்நோயினால் மூட்டு வலியும் ஏற்படலாம் (Psoriatic Arthritis). சிகிச்சை முறையாக சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டால் முற்றிலும் குணமடையலாம்.

3. முகப்பரு:
குறிப்பாக வாலிப வயதில் உள்ள சிலருக்கு இது பெரிய பிரச்னையாகஇருக்கும்.

தீர்வு :
1. உணவு முறை(Food Change).
2. உள் மருந்து
3. வெளி மருந்து (External Application). இவற்றால் முகப்பருவிலிருந்து விடுதலை அடைய முடியும். இவற்றை பின்பற்றுவதால் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.

4. கரப்பான் (Eczema)..
தோலில் சொரசொரப்பான படைகள் தோன்றி, அந்த இடத்தில் வீக்கம் அல்லது சிறு சிறு குருக்கள் உண்டாகும். சிலருக்கு சிறு கீறல்கள் உண்டாகி நீர் கசியும், அரிப்பு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். உதாரணத்திற்கு, தவளையின் தோல் போல இருக்கும். வரும் காரணம் :
வெளியிலிருந்து ஏற்படும் உராய்வு அல்லது உள்ளுக்குள்ளே சாப்பிடும் உணவு ஆகிய ஏதோ ஒரு காரணத்தால் இந்நோய் வருகிறது. கரப்பானை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை கரப்பான்
பொருட்கள் என சித்த மருத்துவம் வகைப்படுத்துகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். சில மாமிசங்கள், கம்பு, திணை, வரகு, சாமை, மீன்,கருவாடு, கத்தரிக்காய், முட்டை போன்றவை கரப்பான் பொருட்கள்.

மருத்துவம்:
இதில் பல வகைகள் இருப்பதால் அந்த வகைக்கேற்ற முறையான உள் மற்றும் வெளி மருந்துகளால் முற்றிலும் குணமாக்கலாம்.

5. தேமல்:
தோலில் நிறமாற்றம் மற்றும் அரிப்பு ஆகிய குறிகுணங்களைக் கொண்டு ஆரம்பிக்கும். உடனடியாக நோய் கணிப்பு (Diagnosis). செய்வது அவசியம். ஏனென்றால், பல்வேறு தோல்நோய்கள் முதலில் தேமல் போல ஆரம்பிக்கலாம்.

மருத்துவம் :
உள் மற்றும் வெளி மருந்துகளால் முற்றிலும் குணமாக்கலாம்.

6. பொடுகு:
ஒரு வகை பூஞ்சைக் காளானால் தலையில் ஏற்படும் நோய். தலையில் அரிப்பு, சொறிந்தால் பொடி போல உதிரும்.

மருத்துவம்:
முறையான உள் மற்றும் வெளி சித்த மருந்துகளால் முற்றிலும் குணமாக்க முடியும். மீண்டும் வராமல் தடுப்பதற்கு தலையணை உறைகள், தலை உலர்த்தும் துணிகள் போன்றவற்றை சுகாதாரமாக பயன்படுத்த வேண்டும்.

7. சேற்றுப் புண்:

ஈரமான தரையில் நடந்துகொண்டு, நின்றுகொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கால் விரல் இடுக்குகளில் புண் ஏற்படும். கால் விரல்கள் மிகவும் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இவை ஏற்பட்டால் எளிதில் குணமாகாமல் பிரச்னை ஏற்படுத்தும்.
மருத்துவம் : உள் மருந்துகள் மற்றும் தொடர்ச்சியான வெளி மருந்துகள் மற்றும் ஈரத்தரையை தவிர்த்து கால்களை உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் குணப்படுத்த முடியும்.

8. பித்த வெடிப்பு:
பாதங்களின் அடிப்பகுதியில் வெடிப்பு ஏற்படும். முக்கியமாக குதிங்காலில் ஏற்படும். இரு ஒரு அழகுப் பிரச்னையாக பலருக்கு ஆகிவிடுகிறது. ஆனாலும் சிலருக்கு காலை கீழே ஊன்ற முடியாத அளவுக்கு வலி கொடுக்கும்.

மருத்துவம் :
சித்த மருத்துவத்தில் இதனை மிகச் சுலபமாக குணமாக்கலாம்.

9. படுக்கைப் புண்:
தொடர்ந்து படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பொதுவாக முதுகு மற்றும் உடலின் பின் பாகத்தில் ஏற்படும் புண்கள் இவை. முக்கியமாக வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும்.

மருத்துவம்:
சுகாதாரமான முறையில் படுக்கையை பராமரிப்பதாலும் சில புற மருந்துகளை உடலில் தடவி படுக்க வைப்பதாலும் இதனை தவிர்க்கலாம் மற்றும் குணமாக்கலாம். தோல் நோய்களைப் பொறுத்தவரையில் காலம் தாழ்த்தாமல் ஆரம்பத்திலேயே சித்த மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால் தோல் நோய்களிலிருந்து முழுமையாக விடுதலைப் பெற முடியும்.
உணவு:
பொதுவாக தோல் நோயாளிகள் மீன், கருவாடு, கத்தரிக்காய், மாங்காய், அதிக புளிப்புள்ள உணவுகள், அதிக காரமுள்ள உணவுகள், கரப்பான் பொருட்கள், தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மருத்துவ குளியல் பொடிகளை பயன்படுத்தி குளித்து வருவதால் தோல் நோய்கள் வராமல் பாதுகாக்க முடியும். இவற்றை சித்தமருத்துவரின் ஆலோசனைகளோடு செய்வது நல்லது.
மனது :
மனம் அமைதியாய் இருப்பது தோல் நோய்களுக்கு நல்லது.

உணவு முறை:
தோல் நோய்கள்:
தவிர்க்க வேண்டியவை:

  • மீன்
  • கருவாடு
  • கோழிக்கறி
  • கத்தரிக்காய்
  • புளி
  • அதிக உப்பு
  • தட்டைப் பயறு (காராமணி)
  • கம்பு
  • சோளம்
  • வரகு
  • வாழைக்காய்
  • பாகற்காய்
  • பூசணிக்காய்

 

செய்ய வேண்டியவை:

  • நல்ல ஓய்வு, காற்றோட்டமான சூழ்நிலை அவசியம்.
  • குளிக்க பாசிப்பயறு மாவு, நலுங்கு மாவு போன்றவை பயன்படுத்தலாம்.

 

யோகாசனம்:

  • சர்வாங்காசனம்
  • ஹாலாசனம்
  • மயூராசனம்
  • சவாசனம்
  • பத்மாசனம்
  • பிராணாயாமம்

 

உடற்பயிற்சிகள்:
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆசனங்கள் செய்ய வேண்டும்.
அந்த ஆசனங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

தனுராசனம்:
உடலை வில் போல் வளைத்துச் செய்யும் உடற்பயிற்சி.

புஜங்காசனம்:
பாம்பைப் போல உடலை வளைத்தல்.

சேதுபந்த சர்வாங்க ஆசனம் :
பாலம் போல உடலை வளைத்த நிலை.

வஜ்ராசனம்
கால்களை மடக்கி அதன் மேல் நிமிர்ந்து உட்காரும் நிலை.

தடாசனம்
நேராக நிற்கும் நிலை.

சவாசனம்
உயிரற்ற உடலைப்போல எந்த முயற்சியும் இல்லாமல் படுத்திருக்கும் நிலை.

 

Previous Article

இளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES

Next Article

எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?

Related articles More from author

  • நோய்கள்

    அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்.

    September 12, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    இரத்த அழுத்தம்

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    ஆண்கள் நோய்கள்

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?

    September 6, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    இரத்தக் கொதிப்பு

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER

Leave a reply Cancel reply

  • சர்க்கரை நோய்

    சர்க்கரை நோயாளிகளின் கண் பாதுகாப்பு – Eye Care in Diabetes

  • நோய்கள்

    ஒவ்வாமை – Allergy

  • நோய்கள்

    சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

Latest Articles

சர்க்கரை நோய்

இளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES

  • வாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள்தானா? – NEED TO TAKE SAME MEDICINES LIFE LONG?

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • நோய் வேறு நோயாளி வேறு – PATIENT DIFFER FROM DISEASE

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மருந்துதானா? – DO ALL NEED SAME MEDICINES ?

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • உங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018

Timeline

  • October 1, 2018

    முகப்பரு

  • October 1, 2018

    என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

  • October 1, 2018

    சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

  • October 1, 2018

    மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

  • October 1, 2018

    கல்லீரல் நோய்கள்

Get in touch

Dr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S ., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 94443 17293
E-mail id:drjeromexavier@gmail.com

Books

  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ₹260.00
  • சித்த மருத்துவ ஜன்னல் ₹190.00

Facebook

Dr. Jerome Xavier's Siddha Clinic
  • Call Us: +91 94443 17293
  • Mail Us: drjeromexavier@gmail.com
© Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D 2016 . All Rights Reserved.