தைராய்டு பிரச்னைகள்

தைராய்டு பிரச்னைகள்:
பெரும்பாலும் பெண்களையே பாதிக்கும் இந்த பிரச்னைக்கு காரணமான உறுப்பு தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பி ஆகும் . 5% பேருக்கு இந்த உறுப்பின் செயல்பாட்டில் பிரச்னை வருகிறது. தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பது, குறைவாக சுரப்பது, சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கட்டிகள் என பலவகையான பிரச்னைகள் இதில் உண்டாகின்றன.
சித்த மருத்துவத்தில் இந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு உள்ளது.
மருத்துவம்:
இதற்கான மருத்துவத்தை புரிந்து கொள்வதற்கு முன் இந்த உறுப்பை பற்றிய ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள சில உறுப்புகள் ஹார்மோன்களை சுரக்கின்றன. அவற்றில் சில தாங்கள் சுரக்கும் வேதிப்பொருள்களை ஒரு நாளத்தின் வழியாக (குழாய் போல) இரத்தத்தில் கலக்கின்றன. ஆனால் சில வகை உறுப்புகள் இப்படிப்பட்ட நாளங்கள் இல்லாமல் நேரடியாக தாங்கள் சுரக்கும் வேதிப்பொருள்களை இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இப்படிப்பட்ட சுரப்பிகளை ‘நாளமில்லா சுரப்பிகள்’ என அழைக்கிறோம். இப்படிப்பட்ட உறுப்புகளின் செயல்பாடு அவைகளின் அசைவுகள் மற்றும் அவைகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை பொறுத்து அமைகின்றன. உதாரணமாக சர்க்கரை நோய்க்குக் காரணமான கணையம் எனும் உறுப்பும் ஒரு நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது.
இவைகளையெல்லாம் உடலை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வளைத்து செய்யப்படும் யோகா போன்ற பயிற்சியால் தூண்டலாம். எனவே தைராய்டு பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் உள்
மருந்துகளுடன் யோகாவையும் சேர்த்து செய்து வருவதால் தைராய்டு சுரப்பி தூண்டப்பட்டு அதன் செயல்பாடு சரிசெய்யப்படுகிறது. தைராய்டு பிரச்னையை சரிசெய்யும் யோகாசனங்கள்.
தைராய்டு நோய்கள்:
ஹைப்போ தைராய்டிசம்
தவிர்க்க வேண்டியவை:
முட்டைகோஸ்
காலிஃப்ளவர்
ப்ராக்கோலி
முள்ளங்கி
சோயாபீன்ஸ்
சர்க்கரை
நூல்கோல்
வேர்க்கடலை
பட்டாணி
சேர்க்க வேண்டியவை:
அயோடின் உள்ள உப்பு
கடல் உணவுகள் (மீன், இறால்,
நண்டு)
வெங்காயம்
பூண்டு
தேங்காய் எண்ணெய்
யோகாசனம்
சர்வாங்காசனம்
புஜங்காசனம்
மத்ஸ்யாசனம்
ஹாலாசனம்
சுப்தவஜ்ராசனம்
ஒட்டக ஆசனம்
யோக முத்ராசனம்
சவாசனம்
பிராணாயாமம்
விபரீதகரணி