சிறுநீரக நோய்கள்

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் (Kidney stones) மற்றும் சிறுநீரக செயலிழப்பு ((Kidney failure)ஆகிய இரண்டும் பரவலாக உள்ள சிறுநீரக நோய்கள் இவை இரண்டிற்குமே சித்த மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆரம்பத்திலேயே இவைகளுக்கு சித்த மருத்துவம், எடுத்துக் கொண்டால் இவைகளை மிகச் சாதாரணமாக குணப்படுத்திவிட முடியும்.
சிறுநீரகக் கற்களை மருந்தினால் கரைக்க முடியும்சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை அறுவை சிகிச்சை செய்யாமல் சித்தா மருந்துகள் சாப்பிடுவதாலேயே கரைக்க முடியும். எனவே அறுவை
சிகிச்சையும் தேவையில்லை. அதிக பணமும் தேவையில்லை. சிறுநீரகத்தில் உருவாகின்ற கற்களைப் பொறுத்தவரையில் மருந்துகள் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்கிற முடிவுக்கு அலோபதி மருத்துவம் வந்துவிட்டது. ஆனால் சிறுநீரகக் கற்களை சித்த மருத்துவத்தில்
மிகச் சாதாரணமாக மருந்துகளால் கரைத்து விட முடியும் என்கிற நற்செய்திதான இந்தக் கட்டுரை.
“Attempts to developed drugs that dissolve stones have so far been unsuccessful” அதாவது சிறுநீரகங்களில் உருவாகும் கற்களை கரைப்பதற்கான மருந்துகளைக் கண்டறியும் முயற்சிக்கு வெற்றியடையவில்லை என்கிறது அலோபதி மருத்துவம். எனவே சிறுநீரகக் கற்களுக்குஅறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சையை(ESWL) பரிந்துரைக்கின்றனர்.
அலோபதி மருத்துவத்தின் மருந்தியல் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருப்பது. அதன் வளர்ச்சியை கழுத்து வலிக்க
அண்ணார்ந்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்படியிருக்க அதனால் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு மருந்து தயாரிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சிறுநீரகக் கற்கள் எனும் பிரச்னையை ‘கல்லடைப்பு நோய்’ என சித்த மருத்துவம் நோய் கணிப்பு செய்கிறது.
சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன?
சிறுநீரகங்கள் மற்றும் அவற்றிலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை கொண்டு செல்லும் சிறுநீர் குழாய்கள் சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் வரை உள்ள எந்த இடத்திலும் உருவாகும் கற்களை சிறுநீரகக் கற்கள் என்கிறோம். சிறிய மணல் அளவு கற்களில் இருந்து பல மில்லி மீட்டர் அளவு வரை உருவாகலாம். அவைகளுடைய பகுதிப் பெ £ருள்களால் அவை ப ல வகைப்படுகின்றன.
80% சிறுநீரகக் கற்கள் கால்சியம் தாதுவினால் உருவாகின்றன. அவை கால்சியம் ஆக்சலேட்களாலும்(Calcium Oxalate) கால்சியம் பாஸ்பேட்களாலும் (Calcium Phosphate) உருவாகின்றன. 15% கற்கள் மக்னீசியம் அம்மோனியம் பாஸ்பேட்களால்(MagnesiumPhosphate, ammonium Phosphate) உண்டாகின்றன. இவை தவிர சிஸ்டைன்(Cystine) மற்றும் யூரிக் அமிலத்தாலும் (Uricacid) கற்கள் உண்டாகின்றன.
சிறுநீரகக் கற்கள் ஏன் உண்டாகின்றன?
இரண்டு காரணங்கள்:
1. நாம் உண்ணும் உணவும் நீரும் காரணம்.
2. பரம்பரையாக வரும் உயில் எழுதாத சொத்து.
யாருக்கெல்லாம் சிறுநீரகக் கற்கள் வரலாம்? போதுமான அளவு நீர் குடிக்காமல் இருப்பவர்கள்.
புரதச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் அதிகம் சாப்பிடுவார்கள். ‘‘என்ன சமைக்கிற… உப்பே பத்தல…. இன்னும் கொஞ்சம் உப்பு போடு….’’என்று பேசும் நாக்கு உள்ளவர்கள். திராட்சை பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு, அதிகம் குடிப்பவர்கள். கால்சியம் மாத்திரைகளை அதிக வருடங்கள் எடுத்துக் கொள்பவர்கள்.
சில நோய் நிலைகளில் உள்ளவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். உதாரணமாக, இரத்தத்தில் கால்சியம் அளவை அதிகரிக்கக்கூடிய பாரா தைராய்டு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள். பரம்பரை சொத்தாக கற்களைப் பெறுபவர்கள். பெரும்பாலும் ஆண்களுக்கு இந்நோய் உண்டாகிறது.
கல்லடைப்பு நோயின் குறிகுணங்கள்:
3 மில்லி மீட்டர் அளவு வரையிலான கற்கள் தானாவே சிறுநீர் கழிக்கும்போது வெளியே வந்துவிடும். அதற்கு மேல் பெரியதான கற்கள் சிறுநீரகத்திலோ சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்பைக்குச் செல்லும் குழாயிலோ, சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம்
வரையிலோ எங்கேனும் அடைத்துக்கொண்டு அல்லது சிக்கிக் கொண்டு வலியை ஏற்படுத்தும்.
தொப்புள், உள்தொடை, ஆண்குறி, பெண்குறி, அடி முதுகு போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்.
வலியைத் தொடர்ந்து வாந்தி வரும் உணர்வு (ஓக்காளம்).
- வாந்தி எடுத்தல்.
- சுரம்,
- சிறுநீரில் இரத்தம் வருதல்.
- சிறுநீர் கழிக்கும்போது வலி எடுத்தல்.
போன்ற குறிகுணங்கள் காணப்படும்.
நோயை எவ்வாறு கண்டறிவது?
மேற்கூறியவாறு கற்கள் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை வரைவுச்சோதனை (Scan) செய்து பார்த்துக் கொள்வது நல்லது. (பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை முழு வயிற்றுப்
பகுதியையும் வரைவுச் சொதனை(Ultra sound scan – KUB) செய்து பார்த்துக் கொள்வது நல்லது.
சித்த மருத்துவம் வகைப்படுத்தும் கற்களின் வகைகள்:
- வாத கல்லடைப்பு
- பித்த கல்லடைப்பு
- கப கல்லடைப்பு
- வெண்ணீர் கல்லடைப்பு
என கல்லடைப்பு நோய் நான்கு வகைப்படுகிறது.
வாத கல்லடைப்பு நோயில் கற்கள் முள் போன்று கருமையாகஇருக்கும். இந்நோயில் சிறுநீர்ப்பையில் வலி இருக்கும். பித்த கல்லடைப்பு நோயில் கற்கள் செம்மை கலந்த மஞ்சள்
நிறத்தில் இருக்கும். இந்நோயில் சிறுநீர்ப்பையில் கொதிப்பும் எரிச்சலும் இருக்கும்.
கப கல்லடைப்பு நோயில் கற்கள் வெண்மையாக வழவழப்பாக இருக்கும். சிறுநீர்ப்பை குளிர்ச்சியாக உணரப்படும். அந்த இடத்தில் ஊசியால் குத்துவது போல வலி இருக்கும்.
வெண்ணீர் கல்லடைப்பு ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னை. விந்துக்கள் தொடர்பாக வரும் பிரச்னை இது.
நல்ல உடல் நிலையில் உள்ள இளம் வயது ஆண்களுக்கு ஏன் கற்கள் உண்டாகின்றன என தெரியவில்லை என அலோபதி மருத்துவம் சொல்வதற்கான பதில் இங்கே இருக்கிறது.
மருத்துவம் :
சித்த மருத்துவத்தில் சில சுண்ணங்கள், பற்பங்கள் மற்றும் சில புகைநீர்கள் போன்ற கற்களை கரைக்கக்கூடிய வலிமையான மருந்துகள் உள்ளன. இவற்றுடன் சில மூலிகைகளின் குடிநீரையும். எடுத்துக்கொள்வதன் மூலம் கற்களை கரைக்க முடியும். அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கக்கூடிய நோய்களில்சிறுநீரகக் கற்களும் ஒன்று.
கல்லடைப்பு
சேர்க்க வேண்டியவை:
- நிறைய தண்ணீர்
- வாழைத்தண்டு
- முள்ளங்கி
- இளநீர்
- வெள்ளரி
- நார்ச்சத்து மிகுந்த உணவு
- முழுதானியங்கள்
- மோர்
- நுங்கு
- பீன்ஸ்
தவிர்க்க வேண்டியவை:
- இறைச்சி
- முட்டை
- அதிக உப்பு, காரம், மசாலா பொருட்கள்
- முட்டைக்கோஸ்
- தக்காளி
- காலிப்ளவர்
- பால், பால் பொருட்கள்
- கால்சியம் மாத்திரைகள்
- துரித உணவு
- பதப்படுத்தப்பட்ட உணவு
- சோடா உப்பு
- பசலைக்கீரை
- காபி, தேநீர்
- மென்பானங்கள்
- ஐஸ்கிரீம் சாக்லேட்
- உலர் பழங்கள், முந்திரி, பாதாம்
செயல்கள்
தவிர்க்க வேண்டியவை:
- சிறுநீரை அடக்குதல்
- அதிக வெயிலில் அலைதல்
- மது அருந்துதல்
- புகை பிடித்தல்
யோகாசனம்:
- சுப்தவஜ்ராசனம்
- மச்சாசனம்
- சிறுநீரக செயலிழப்பு
நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, சிறுநீரகத்தை பாதிக்கும் மருந்துகள்,இரத்தக்குழாய் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் தனது சுத்திகரிக்கும் செயலை இழந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் கழிவுப்பொருள்கள் சேர்ந்து தீவிர நிலைக்கு உடலை கொண்டு சென்று
விடுகிறது.
மருத்துவம்:
இதற்கு நவீன மருத்துவத்தில் செயற்கையாக இரத்தத்தை சுத்திகரிப்பதுதான் சிகிச்சை முறை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பநிலையிலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால்
மிகச்சாதாரணமாக இதனை குணப்படுத்த முடியும்.
- சிறுநீரக செயலிழப்பு
- உணவு
தவிர்க்க வேண்டியவை:
- அதிக உப்பு, காரம்
- ஊறுகாய்
- கருவாடு
- அப்பளம்
- சிப்ஸ்
- வத்தல்
- உப்புக்கண்டம்
- சோடா உப்பு
- பதப்படுத்தப்பட்ட உணவு
- துரித உணவு
- சாக்லேட்
- பிஸ்கட
- ஆட்டுக்கறி
- செயற்கை நிறமூட்டிகள்
- செயற்கை மணமூட்டிகள்
- பால்பொட்டாசியம் நிறைந்தஉணவுகள் (உருளை, வாழைப்பழம்,தக்காளி)
- அதிக தண்ணீர்
சேர்க்க வேண்டியவை:
- குறைவான உப்பு
- குறைவான நீர்
செயல்கள்
- தவிர்க்க வேண்டியவை
- புகை பிடித்தல்
- வலி மாத்திரைஉட்கொள்ளல்
- மது அருந்துதல்