சித்த மருத்துவம்

Main Menu

  • முதல் பக்கம்
  • டாக்டரை பற்றி
  • சித்தா பற்றி
  • சர்க்கரை நோய்
  • நோய்கள்
  • நோய் தடுப்பு
  • முகவரி
  • புத்தகம்

logo

Header Banner

சித்த மருத்துவம்

  • முதல் பக்கம்
  • டாக்டரை பற்றி
  • சித்தா பற்றி
  • சர்க்கரை நோய்
  • நோய்கள்
  • நோய் தடுப்பு
  • முகவரி
  • புத்தகம்
  • முகப்பரு

  • என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

  • சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

  • மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

  • கல்லீரல் நோய்கள்

நோய்கள்
Home›நோய்கள்›சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

By Dr. JEROME XAVIER
October 1, 2018
1130
0
Share this:
சித்த மருத்துவத்தில் மன நோய்களுக்கான முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.
பொதுவாக மன நோயாளிகள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்வரை சரியாக இருப்பார்கள். மருந்தை இடையில் கொஞ்சம் நிறுத்தினாலும் மீண்டும் பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கும்.
அப்படியானால் மன நோயாளிகள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?
இல்லை.
அப்படியானால் ஏன் பெரும்பாலானவர்களுக்கு மன நோய் முற்றிலுமாக குணமாவதில்லை?

சித்த மருத்துவத்தில் மன நோய்கள்:

சித்த மருத்துவம் மன நோய்களை பல்வேறு விதமாக வகைப்படுத்துகிறது.
மன நோய்கள் ஒரு தனி பிரிவாக(Psychiatry) சித்த மருத்துவத்தில் உள்ளது. கிரிகை நோய்கள் என இவை வகைப்படுத்தப்படுகின்றன.
யூகி, அகத்தியர் போன்ற சித்த மருத்துவ அறிஞர்களின் நூல்கள் மன நோய்களைப் பற்றி விளக்குகின்றன.

சித்த மருத்துவத்தில் மன நோய்கள்:

  • கிரிகை
  • பிரமை
  • உன்மத்தம்
  •  மதஅழிவு

என பலவிதமாக வகைப்படுத்தப்படுகின்றன.

மன நோய்களுக்கான அடிப்படை காரணங்கள்:

  1. மரபணு ரீதியாக வருபவை(Genetic)
  2. உடலில் இயங்கும் இயக்கங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றின் மாறுபாடுகளால் ஏற்படும் மன கோளாறுகள்.
  3. உடல் தாதுக்களான சாரம் (fluid part of all tissues), இரத்தம், தசை, எலும்பு, கொழுப்பு, நரம்பு, விந்து அல்லது அண்டம் ஆகிய ஏழு உடல் தாதுக்களில் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகும் மன நோய்கள்.
  4. நச்சுக்கள் மற்றும் மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள்(Toxins).
  5. புற காரணிகள் (Social factors).

மன நோய்களுக்கான சிகிச்சை:

நான்கு நிலைகளாக மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் போதுதான் முழுமையான விடுதலை கிடைக்கும்.

முதல் கட்ட சிகிச்சை:

உடலில் மாறுபாடடைந்த இயக்கங்களான வாதம், பித்தம், கபம் என்பவைகளை சரியான அளவுக்கு கொண்டுவர வேண்டும்.
இதற்கு முதலில் நோயாளியின் நாடிநிலையை (Pulse reading) கணித்து அதற்குரிய சிகிச்சையை செய்ய வேண்டும்.

இரண்டாம் கட்ட சிகிச்சை:

பலவீனமடைந்த உடல் தாதுக்களை பலப்படுத்தும் விதத்தில் மருந்துகளையும், உணவுகளையும் கொடுக்க வேண்டும்.

மூன்றாம் கட்ட சிகிச்சை:

என்ன நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என கண்டறிந்து அதற்குரிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
இதில் உள் மருந்து மற்றும் புற மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நான்காம் கட்ட சிகிச்சை:

மேற்கண்ட மூன்றும் உடலை சரிசெய்வதற்கான சிகிச்சைகள். இதனை அடுத்து மனதை சரிசெய்வதற்காக சில பயிற்சிகளை கொடுக்க வேண்டும்.

இதற்கு அட்டாங்க யோகம் எனும் எட்டுவித பயிற்சிகள் உள்ளன.

  1. இயமம்
  2. நியமம்
  3. ஆசனம் – யோகாசனம்
  4. பிராணாயாமம் – மூச்சுப்பயிற்சி
  5. பிரத்தியாகாரம்
  6. தாரணை
  7. தியானம் – Meditation
  8. சமாதி
போன்ற மனதை நிலைப்படுத்தும் பயிற்சிகள் உள்ளன. இவைகள் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்றவாறு பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆற்றுப்படுத்துதல் (Counseling):

மேற்கண்ட நிலைகளில் நோயாளியின் உடலையும் மனதையும் சரிசெய்த பிறகு அவர்களின் பிரச்சனைகளுக்குத் தக்கவாறு அவர்களை ஆற்றுப்படுத்துவது அவசியம்.
இவ்வாறான படி நிலைகளில் மன நோய்களை சரிசெய்யும் போது முற்றிலுமாக அந்நோயிலிருந்து விடுபட முடியும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
website www.doctorjerome.com
Previous Article

மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

Next Article

என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

Related articles More from author

  • நோய்கள்

    தைராய்டு பிரச்னைகள்

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    குடல் புண்கள்

    September 27, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    குழந்தைகளின் நோய்கள்:

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்.

    September 12, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?

    September 6, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    மலச்சிக்கல்

    September 7, 2018
    By Dr. JEROME XAVIER

Leave a reply Cancel reply

  • சித்தா பற்றி

    சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?

  • சர்க்கரை நோய்

    சர்க்கரை நோயை மூலிகைகளால் மட்டும் சரிசெய்துவிடமுடியாது – HERBALS ALONE CAN NOT CURE DIABETES

  • நோய்கள்

    ஒவ்வாமை – Allergy

Latest Articles

சர்க்கரை நோய்

இளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES

  • வாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள்தானா? – NEED TO TAKE SAME MEDICINES LIFE LONG?

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • நோய் வேறு நோயாளி வேறு – PATIENT DIFFER FROM DISEASE

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மருந்துதானா? – DO ALL NEED SAME MEDICINES ?

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • உங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018

Timeline

  • October 1, 2018

    முகப்பரு

  • October 1, 2018

    என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

  • October 1, 2018

    சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

  • October 1, 2018

    மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

  • October 1, 2018

    கல்லீரல் நோய்கள்

Get in touch

Dr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S ., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 94443 17293
E-mail id:drjeromexavier@gmail.com

Books

  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ₹260.00
  • சித்த மருத்துவ ஜன்னல் ₹190.00

Facebook

Dr. Jerome Xavier's Siddha Clinic
  • Call Us: +91 94443 17293
  • Mail Us: drjeromexavier@gmail.com
© Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D 2016 . All Rights Reserved.