இரத்த அழுத்தம்

மருந்துகளில் பக்க விளைவுகள் உள்ளதைப்போல முறையாகச் செய்யாத ஆசனங்களாலும் பக்க விளைவுகள் உண்டாகும். ஒரு வாத்துக்கூட்டம் இருந்ததாம். ஒருவன் அதில் ஒரு வாத்தை
துப்பாக்கியால் சுட்டானாம். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ‘‘அய்யோ… என்னைத் தான் சுட்டுவிட்டான்…’’ என்று எல்லா வாத்தும் செத்துவிட்டதாம். கேட்க சிரிப்பாய் இருந்தாலும் சிலபேருக்கு இரத்த அழுத்தம் இப்படித்தான் கூடும்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது இரத்த அழுத்தம் இயல்பாகத்தான் இருக்கும். டாக்டரின் அறைக்குள் சென்றதும் சிறிது கூடும். BP பார்ப்பதற்காக கருவியைக் கையில் கட்டியதும் இன்னும் கொஞ்சம்
கூடும். ஙிறி பார்த்துக்கொண்டிருக்கும் போதே நன்கு கூடிவிடும். காரணம்
வேறொன்றும் இல்லை. வாத்து பயம்தான். இப்படி இரத்த அழுத்தம் white coat hypertension கூடுவதற்கு என்று பெயரே வைத்தாயிற்று. (என்னிடம் ஒரு நோயாளி சொன்னார், ‘‘டாக்டர் … பெரிய சாலைகளில் சிக்னலில் முதலாம் ஆளாக நான் நிற்க நேர்ந்தால் சிக்னல் விழுவதற்குள்
எனக்கு டென்சனாகி ஙிறி கூடிவிடுகிறது’’ என்றார். தாமதமாவதால் டென்சனாகிறாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் கதையே வேறு. சிக்னல் விழுந்தவுடன் பின்னால் நிற்கும் வாகனங்களில் உள்ளவர்கள் ஹாரன் அடிப்பார்களே என்பதை நினைத்து BP ஏறுமாம்.)
எதற்காக இவைகளைச் சொல்கிறேன் என்றால், இரத்த அழுத்தத்தைஅதிகரிப்பதில் ‘மன நிலை’ முக்கிய பங்கு வகிக்கிறது.
எது எப்படியோ 30 வயதுக்கு மேல் கண்டிப்பாக இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம். சரி, இனி இரத்த அழுத்த அளவுகளைப் பற்றி பார்ப்போம். ஸ்பிக்மோமேனோமெட்ரி ….’ பயப்பட வேண்டாம், வேறு ஒன்றும் இல்லை, ஙிறி பார்க்கும் கருவியின் பெயர்தான். அதில் பார்த்து இரண்டு அளவுகளை டாக்டர் சொல்வார். நல்ல உடல் நிலையில் இயல்பான இரத்த அழுத்தம் 120 / 80 னீனீபிரீ என இருக்க வேண்டும். ஓரளவு அதிகரித்தாலும் முதல் அளவு 139க்கு குறைவாகவும் இரண்டாம் அளவு 89க்கு குறைவாகவும் இருக்கலாம். அதற்கு மேல் இருப்பது அதி இரத்த அழுத்தம். இதற்கு மேல் உள்ளதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்.
நிலை 1 அதி இரத்த அழுத்தம் 140-159 / 90-99
நிலை 2 மிக அதி இரத்த அழுத்தம் 160-179 / 100 – 109
நிலை 3 தீவிர இரத்த அழுத்தம் ≥180 / ≥ 110
நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று ஓரளவு புரிந்து கொள்வதற்காகத்தான் இதைக் கூறினேன். சரி, இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது, இனி என்ன செய்வது? மருந்துகள் எடுத்துக்கொள்வதுடன், உணவு, செயல், மனநிலை என்ற மூன்று விசயங்களிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், இரத்தக் கொதிப்பு ஒரு பிரச்னையே இல்லை. மருந்துகளைப் பார்க்கும் முன் உடலையும் மனதையும் எப்படி சரிசெய்வது என்று பார்ப்போம்.
‘‘இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே’’
என்ன இது? புரியலல்ல… வாங்க பழகலாம்.இந்த பாடலில் எட்டு காரியங்கள் சொல்லப்படுகின்றன.அவையாவன
1. இயமம்,
2. நியமம்,
3.ஆசனம்
4.பிரணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி.
நோய் இல்லாமல் வாழ்வதற்கு கடைபிடிக்க வேண்டிய எட்டு காரியங்கள் இவை. இவற்றில் இரண்டு காரியங்களான பிராணாயாமம் மற்றும் யோகாசனம் பற்றி மட்டும் விளக்குகிறேன்.
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இவைகளைச் செய்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
பிராணாயாமம் செய்யும் முறை:
- முதலில் அமைதியான மன நிலையில் தான் இதைச் செய்ய வேண்டும்.
- அதிகாலையில் காலைக்கடன்களை முடித்தபின் இதை செய்வது நல்லது.
- வெறும் வயிற்றில் செய்வது நல்லது அல்லது குளிர்ந்த நீர் மட்டும் பருகி பின் செய்யலாம்.
- முதலில் பத்மாசனம் என்ற நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்
(தரையில் அமர்ந்து வலது காலை இடது தொடையின் மீதும், இடது - காலை வலது தொடையின் மீதும் வைத்து உட்காரும் ஒரு நிலை)
பிறகு
1. முதலில் வலது கை கட்டை விரலால் வலது நாசித்துளையை மூடிக்கொண்டு இடது நாசித்
துளையால் மெதுவாக காற்றை உள்ளே இழுக்க வேண்டும். சிரமப்பட்டு இழுக்கக்கூடாது.
மென்மையாக முடிந்தவரை இழுக்க வேண்டும்.
2. பிறகு இடது நாசித் துளையையும் மோதிர விரலால் மூடிக்கொண்டு மூச்சை அப்படியே முடிந்தவரை அடக்கி வைத்திருக்க வேண்டும். சிரமப்பட்டு அடக்கக் கூடாது. மென்மையாகச் செய்ய வேண்டும்.
3. அடுத்து வலது கட்டை விரலை எடுத்துவிட்டு மிகவும் மெதுவாக வலது நாசித்துளை வழியாக காற்றை விட வேண்டும்.
4. இனி முதலில் சொன்னது போலவே வலது நாசியின் வழியாக காற்றை உள்ளே இழுத்து,
5. முடிந்தவரை வைத்திருந்து,
6. இடது நாசி வழியாக விட வேண்டும். இப்படி நாசித்துளைகளை மாற்றி மாற்றிச் செய்ய
வேண்டும்.
இப்படி தொடர்ந்து பலமுறை செய்ய வேண்டும். இந்த மூச்சுப் பயிற்சியே பிராணாயாமம்.
பிராணாயாமம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டியவை:
- பனிக் காற்றில் இதைச் செய்யக்கூடாது.
- அவசர அவசரமாகச் செய்யக்கூடாது.
- மூச்சை இழுத்த நாசியிலேயே விடக்கூடாது.
- ஒரு நாளைக்கு அதிகாலை, மதியம், மாலை, இரவு என நான்கு முறை செய்யலாம்.
- வேளை ஒன்றுக்கு 20 முதல் 80 பிராணாயாமம் செய்யலாம்.
- பசி,வயிறு நிறைய உண்ட பிறகு கோபம் போன்ற உணர்ச்சி வசப்பட்டநிலைகளில் பிராணாயாமம் செய்யக்கூடாது.
நன்மைகள்:
- இந்த பயிற்சி நரம்பு மண்டலத்தையும் இரத்த ஓட்ட மண்டலத்தையும் நல்ல நிலைக்குக் கொண்டுவரும்.
- பதற்றம் குறையும். மன அமைதி உண்டாகும். இரத்த அழுத்தம் குறையும்.
- முதுமை தள்ளிப்போகும். ஆயுள்காலம் கூடும், செரிமான சக்தி கூடும்.,
- ஞாபக சக்தி கூடும்., மனக் கட்டுப்பாடு வரும்.
- மூன்று மாதங்கள் பிராணாயாமம் செய்து வந்தால் இரத்தக் குழாய்கள் சுத்தமடைகின்றன.
- ஞான சரநூல், திருமூலர் ஞானம், திருவள்ளுவர் ஞானம் போன்ற நூல்களில் பிராணாயாமம் பற்றிய பல நுணுக்கமான செய்திகள் உள்ளன.
பிராணாயாமம் பற்றிச் சொல்வதற்கு இன்னும் நிறைய விசயங்கள் இருந்தாலும் இவ்வளவு அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்.