நரம்பு நோய்கள்

ஏழு வகை உடல் தாதுக்களில் நரம்புக் கூட்டங்களை தனி தாதுவாக சித்த மருத்துவம் வகைப்படுத்தியுள்ளது. உடலில் செயல்படும் பலவிதமான இயக்கங்களில் ‘வாதம்’ என்பது
ஒரு வகை இயக்கம். 10 வகையான வாயுக்கள் உடலில் இயங்குகின்றன.
இந்த வாயுக்கள் இயங்கும் தளங்கள்தான் நரம்புகள்.
உடலின் எல்லா திசுக்களுக்கும் நரம்புகள் செல்வதால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் (உச்சி முதல் பாதம் வரை) பலவிதமாக வெளிப்படுகின்றன. உதாரணமாக நரம்புகள் பாதிக்கப்படுவதால்
- தலைவலி _ (ஒற்றைத் தலைவலி போன்றவை)
- முகவாதம்
- தசையில் ஏற்படும் பாதிப்புகள்
- பேச்சு பாதிப்பு
- பலவீனம்
- நடையில் மாற்றம் (கால் நரம்புகள் பாதிப்பு)
- கை, கால் செயலிழப்பு _ பக்கவாதம்
- மரத்துப்போதல்
- நினைவு மறதி
- வலிகள்
- விழுங்க முடியாமை
- கண் பாதிப்பு
- வலிப்பு நோய்கள்
- தூக்கம் பாதிப்பு
- ஐம்புலன்களின் பாதிப்பு
போன்ற பலவிதமான விளைவுகளை உண்டாக்குகின்றன.
மருத்துவம்:
சித்த மருத்துவம் இவ்வகை நரம்புகளின் பாதிப்புகளை ‘வாத நோய்கள்’ என வகைப்படுத்தியுள்ளன. சாதாரண நரம்பு வலிகள் முதல், கை கால்கள் செயலிழப்பு தரக்கூடிய
பக்கவாதம் வரை அனைத்து வாத நோய்களையும் சித்த மருத்துவத்தில் நன்கு குணப்படுத்த முடியும்.
பேதி:
எல்லா வாத நோய்களுக்கும் முதலில் பேதிக்கு மருந்து கொடுப்பது அவசியம்.
உள் மருந்து :
நரம்புகளை வலிமைப்படுத்தக் கூடிய மருந்துகள் பல மருந்து வடிவங்களில் உள்ளுக்குள் கொடுக்கப்படுகின்றன.
வெளி மருந்துகள்:
நரம்புகளுக்கான வெளி மருந்துகளும், நரம்புகளின் பாதிப்பினால் தசைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான எண்ணெங்கள் வெளி மருந்துகளாக கொடுக்கப்பட்டு அதனுடன் முறையான தொக்கணம் (மசாஜ்) மற்றும் வர்ம அடங்கல் புள்ளிகளில் அழுத்தம் கொடுப்பதால்
நல்ல பலனை பெற முடியும்.
நரம்பு சம்பந்தமான நோய்கள்
உணவு
சேர்க்க வேண்டியவை:
- பசும்பால்,
- திராட்சை,
- தக்காளி,
- மணத்தக்காளி
- கீரை
- வேர்க்கடலை,
- பட்டாணி,
- பாதாம் பருப்பு,
- முந்திரிப் பருப்பு
- ஆரஞ்சுப் பழம்,
- மலை வாழைப்பழம்
- பாகற்காய்
- சுண்டை
- கத்தரி
- வெங்காயம்
- வெந்தயம்
- பூண்டு
- எள்
- வேப்பம் பூ
- ஓமம்
- இஞ்சி
- யோகாசனம்
- சூரிய நமஸ்காரம்