மலச்சிக்கல்

மூல நோயின் முகவரியே மலச்சிக்கல்தான். மலச்சிக்கல் என்பது வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளின் ஒரு அறிகுறியாகவோ அல்லது வேறு சில நோய்களின் அறிகுறியாகவோ இருக்கலாம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலேயே முதல் மதிப்பெண் எடுப்பது மலச்சிக்கல்தான். எனவே மூல நோயாளிகள் மட்டுமல்லாமல் அனைவரும்
கவனம் செலுத்த வேண்டிய பிரச்னை மலச்சிக்கல். எனவே மலச்சிக்கலையும் அதனை தவிர்ப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.
யாருக்கெல்லாம் மலச்சிக்கல் வரலாம்:
- பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கே மலச்சிக்கல் அதிகம்ஏற்படுகிறது. (21% ஆண்களுக்கும் 41% பெண்களுக்கும்)
- கர்ப்பிணிகளுக்கு விரிவடையும் கர்ப்பப்பை குடலை அழுத்துவதால்மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு வருகிறது (சாதாரண நிலையில்கர்ப்பப்பையின் எடை வெறும் 60 கிராம் தான். நிறைமாத கர்ப்பிணிக்குகர்ப்பப்பையின் அளவு எடையில் 10 மடங்கு உள்ளடக்கத்தில்
1000 மடங்கும் பெரிதாகிறது) மேலும் பிரவசத்தைத் தொடர்ந்தும்மலச்சிக்கலுக்கான வாய்ப்புகள் அதிகம். - அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அதனைத்தொடர்ந்து மலச்சிக்கல் வரலாம்.
- முக்கியமாக சில முதியவர்களுக்கு தினந்தோறும் இதுவே பெரியபிரச்னையாய் மாறிவிடுகிறது.
இந்தக் கட்டுரையில் மூல நோய்க்குக் காரணமாக அமைகின்ற, சாதாரணமாக அன்றாட வாழ்வில் ஏற்படும் மலச்சிக்கலை பற்றி மட்டுமே எழுதுகிறேனே தவிர சில குறிப்பிட்ட நோய் நிலைகளில் ஏற்படும் மலச்சிக்கலின் காரணமும் சிகிச்சையும் வேறு. (உதாரணமாக
முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பு (spinal cord injury) போன்ற நிலைகளில் ஏற்படும் மலச்சிக்கல் போன்றவை)
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
தவறான வாழ்க்கைமுறை
- உடல் உழைப்பு இல்லாமல் குனிந்து நிமிராமல் எப்போதும் அமர்ந்திருப்பது அல்லது படுத்திருப்பது.
- காலையில் மலம் கழிக்கும் உணர்ச்சியை தட்டிக்கழிப்பது
- முறையற்ற உணவுப் பழக்கம்அடைப்புகள்
- பெருங்குடல் மற்றும் மலக்குடலில் ஏற்படும் கட்டிகள்
- பெருங்குடல் அல்லது மலக்குடலுக்கு அருகில் தோன்றி அவற்றை அழுத்தும் கட்டிகள்
- மலவாயில் தோன்றும் கட்டிகள்
- பெருங்குடல் அளவில் பெருத்துப்போதல்
தவறான உணவு முறை
- நார்ச்சத்து இல்லாத உணவு
- நீர்ச்சத்து இல்லாத உணவு
- போதுமான நீர் அருந்தாதது
- ஏதாவது ஒரே வகையான உணவையே வழக்கமாக உண்பது.
- நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்னைகள்
- மன அழுத்தம்
- பக்க வாதம்
- முதுகுத்தண்டில் ஏற்படும் நரம்புக் கோளாறுகள்
- மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் பிரச்னைகள்
மலச்சிக்கலை ஏற்படுத்தும் மருந்துகள்:
- சில வலி மருந்துகள் (அல்லோபதி)
- வயிற்றுவலிக்கான சில மருந்துகள் (antacids) (அல்லோபதி)
- இரத்தக் கொதிப்பிற்கான சில மருந்துகள்(calcium channelblockers)
- மன நோய்க்கான சில மருந்துகள் (அல்லோபதி)
- இரும்புச் சத்து மருந்துகள்
- கால்சியம் மருந்துகள்
- வலிப்புக்கான சில மருந்துகள் (அல்லோபதி)
- நாளமில்லா சுரப்பிகள் மற்றும் சில நோய்நிலைகள்
- மதுமேகம் (நீரிழிவு)
- இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்
- தைராய்டு சுரப்பு குறைதல்
- நாள்பட்ட சிறுநீரக நோய்கள்
- இரத்தத்தில் மெக்னீசியம் அளவு மாறுபடுதல்
- சில மூட்டு நோய்கள்
மேற்கண்ட எல்லா காரணங்களினாலும் ‘‘அபான வாயு’’வின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்படுகிறது. (அபானவாயு என்பது மலக்குடலில் இருந்து மலத்தை கீழ்நோக்கி
தள்ளும் வேலையை செய்யும் காற்றின் இயக்கத்தின் பெயர்) எல்லா மனிதர்களையும்
1. வாத உடலினர்
2. பித்த உடலினர்
3. கப உடலினர்
என மூன்று பிரிவினராக பிரிக்கலாம். அதுபோல நோய்களும் உடலில் செயல்படும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று இயக்கங்களின் சீர்கேட்டினால்தான் உண்டாகின்றன. இதில் மலச்சிக்கல் ‘அபானன்’ எனப்படும் வாதத்தின் செயல்பாட்டில் ஏற்படும் சீர்கேட்டால்
உண்டாகிறது.
உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?
இது எங்களுக்கே தெரியாதா என நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த பிரச்னை உள்ள அனேகர் இது ஒரு உடல் நல குறைபாடு என்ற உணர்வடையாமல் அல்லது அதை வெளிப்படையாக பேசாமல்
அதோடு வாழப்பழகிக் கொள்கின்றனர். எனவே கீழ்க்கண்ட கேள்விகள் ஒரு புரிதலுக்காக.
- வழக்கமாக ஒரு வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கிறீர்களா?
- தினமும் மலம் கழிப்பது ஒரு சிரமமான வேலையாகஇருக்கிறதா?
- தினமும் மலம் இறுகி கட்டியாக வருகிறதா?
- தினமும் மலம் கழித்தாலும், வயிறு காலியாகாத உணர்வுடன்
- கழிவறையில் நிறைய நேரம் இருக்கிறீர்களா
அப்படியானால் மலச்சிக்கலுக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மலச்சிக்கலை தீர்க்கும் வழிமுறைகள்
1. மனம்
2. செயல்
3. உணவு
ஆகிய மூன்று காரியங்களிலும் மாற்றங்கள் செய்துகொள்வதுஅவசியம்.
செயல்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:
1. இரவில் சீக்கிரம் உறங்கச் செல்வது
2. அதிகாலையில் சீக்கிரம் எழுவது.
3. எழுந்ததும் நிறைய நீர் குடிப்பது
4. உடல் நிலைக்கும் வயதுக்கும் ஏற்ற உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது.
உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:
1. நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக்
கொள்வது
2. உணவுக்குப் பின் பழங்கள் உண்பது.
3. தண்ணீர் அதிகம் குடிப்பது
4. வேளை தவறாமல் உண்பது.
5. விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
மனதில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
- எவ்வளவு வேலைகள் இருந்தாலும், எவ்வளவு இலட்சியங்கள்இருந்தாலும் உடலே முதல்பொருள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- காலை எழுந்ததும் மலம் கழிக்கும் உணர்ச்சி இயற்கையாகவே
தோன்றிவிடும். அந்த நேரத்தை அதற்கென்று ஒதுக்கியே தீரவேண்டும். - மன இறுக்கத்தை விட்டுவிட வேண்டும்.
- ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளக்கும் ஒரு அளவுகோலாகவே அன்றாடம் மலம் கழிப்பதை எடுத்துக் கொள்ளலாம். 8, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை தேவையில்லை!
இந்தக் கட்டுரையில் ஒற்றைக் கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.
தவிர்க்க வேண்டியவை:
உணவு வகைகளில், காரம், மிகுந்த புளிப்பு முதலியவை கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவு வகைகள்.
செயல்கள் :
உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய செயல்கள், மலவாயை உறுத்தும்படியான செயல்கள் (எப்போதும் உட்கார்ந்திருத்தல், அதிகமாக வாகனங்களில் பயணித்தல்) தகுந்த ஆசிரியரின் உதவியின்றி யோகா பயிற்சி செய்தல், அடிக்கடி பட்டினி கிடத்தல் மருந்தாகும் உணவு வகைகள்:
கருணைக்கிழங்கு மூல நோயைச் சரி செய்யும், மலத்தை இளக்கும்படியான பழங்கள், கீரை வகைகள் அதிகம் உண்ண வேண்டும். குளிர்ச்சி தரும் பொருட்களை உணவில் சேர்க்க வேண்டும்.
கீரைகளில் துத்திக்கீரை, வெந்தயக் கீரை, முருங்கை, மணத்தக்காளி, பொன்னாங்காண்ணி, பசலைக்கீரை, முளைக்கீரை, அறுகீரை, தாளிக்கீரை முதலியன எருவை இளக்குவதோடு எரிச்சலின்றி எரு வெளியாக உதவுவதால் இவற்றில் ஒன்றை அடிக்கடி உண்ணலாம்.காய்கறிகளில் வெண்டைக்காய், கோவைக்காய், அத்திக்காய் முதலியன மூல நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ‘டாக்டர் எனக்கு அசைவம் இல்லாம சாப்பாடே இறங்காது’ங்கற ஆளா நீங்க; உங்களுக்காகவே தேரையர் எனும் மருத்துவ அறிஞர் அற்புதமான ஒன்றைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறார். பன்றிக்கறிதான் அது. மூலநோய்க்கு மிகச்சிறந்த
மருந்து பன்றி இறைச்சி. உடும்பு, காட்டெலி, நத்தை முதலியனவும் மூலம் போக்கும் என்றாலும்
இவைகளை எங்கே வாங்குவது? ஆனால் பன்றி இறைச்சி கடைகளில் கிடைக்கிறது. மீன் வகைகளில் விலாங்கு மீன் மூலநோயைப் போக்கி எருவாய்க்குடலை வலுவாக்கும்.
சிகிச்சை முறை:
மிகுதியடைந்த வாதத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முதலில் கழிச்சலுக்கான மருந்து கொடுத்து பின்னர் நோய்க்கான மருத்துவம் செய்யப்படுகிறது. மேலும் இந்நோயில் ஏற்படும் வலி, எரிச்சல் முதலியவற்றைப் போக்க சித்த மருத்துவத்தில் ஒற்றடம், ஆவி பிடித்தல்,
புகை, பற்று, பூச்சு, கார சிகிச்சை போன்ற புற மருத்துவமுறைகளும் செய்யப்படுகிறது.
மேலும் இந்நோயில் இரசம், இரத்தம் முதலான தாதுக்கள் வன்மை இழப்பதால் இரத்த விருத்தி அடைவதற்கான உணவு, மருந்துகள் உட்கொள்ள வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய்க்குளியல் அவசியம். இதனால் உடல் சூடு குறைந்து அதனால் ஏற்படும் நோய் தீரும்.
மலச்சிக்கல், எருவாயில் வலி, எரிச்சல், அரிப்பு போன்ற மூலநோயின் அறிகுறிகள் ஆரம்பிக்கும் போதே மருத்துவ ஆலோசனை பெற தயங்க வேண்டாம். சளி, இருமல் என்றால் உடனே தேடி வரும் நோயாளி அவர், ஒரு நாள் என்னிடம் வந்து ‘‘டாக்டர் எனக்கு மூல நோய் மாதிரி இருக்கு.
உக்கார முடியல, வலி தாங்க முடில சீக்கிரமா சரியாக ஒரு மருந்து குடுங்க’’ என்று கேட்டார். ‘‘இதுவரை வந்தபோதே மலச்சிக்கல் இருக்கா என்று கேட்டதற்கு இல்லைன்னு சொன்னீங்களே….’’ என்ற போது ‘‘லேசா இருந்தது எப்படி சொல்றதுனு விட்டுட்டேன். இப்ப ரொம்ப அதிகமா இருக்கு’’ என்றார்.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் நிறைய பேர் மலச்சிக்கலை நீண்ட நாட்கள் வெளியே சொல்ல தயங்கியதால் தான் பின்னர் அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர்சில நாட்களில் மீண்டும் இதே பிரச்னை வந்து அவதிப்படுபவர்களும்
உண்டு.