குழந்தைகளின் நோய்கள்:

குழந்தைகளின் சர்க்கரை நோய் (Juvenile Diabetes) பலவிதமான காரணிகளால் கணையம் பாதிப்படைந்து இன்சுலின் சரியாக சுரக்காமல் சிறுவயதிலேயே சிலருக்கு சர்க்கரை நோய் வந்து விடுகிறது.
இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கொடுமையான ஒரு நிகழ்வு இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின்தான் போட வேண்டும் என்பது கிடையாது. சரியான முறையில் சித்த மருந்துகளையும் அதோடு கீழ்க்கண்ட யோகாசனங்களையும் செய்து வருவதால் மெல்ல மெல்ல கணையத்தின் பீட்டா செல்கள் தூண்டப்பட்டு இன்சுலின் சுரக்கும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய்க்கான சிகிச்சை என்பது வெறுமனே இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்ல.
_ கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரக்கச் செய்வது.
_ இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது.
_ உடல் தசைகள் சர்க்கரையை பயன்படுத்தும் அளவை அதிகரிப்பது.
_ இரைப்பை, குடல் சர்க்கரையை உறிஞ்சும் வேகத்தை குறைப்பது.
_ எல்லா திசுக்களையும் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது (முக்கியமாக கண், நரம்புகள், சிறுநீரகம், இதயம், இரத்தக்குழாய்கள்)
சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமா:
ஆஸ்துமாவை பற்றிய கட்டுரையை முதலில் வாசிக்கவும். சிறுவயதில் ஆரம்பிக்கும் ஆஸ்துமா ஆயுள் முழுவதும் சிலருக்கு தொடரும். ஆனால் தொடர்ச்சியாக ஒரு வருடம் முறையான சித்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால், இந்நோயிலிருந்து சிறுவயதிலேயே முற்றிலும் விடுபடலாம்.
மூளை வளர்ச்சி குறைவு:
சித்த மருத்துவம் உடலை ஏழு விதமான தாதுக்களாக பிரிக்கிறது. சாரம்,(Fluid part of tissues) இரத்தம், தசை, எலும்பு, கொழுப்பு, மூளை, சுக்கில சுரோணிதம் (விந்து, அண்டம்) என்பவையே அவை. பொதுவாகவே ஒவ்வொரு தாதுவையும் வலிமைப்படுத்தக்கூடிய வகையில் சித்த மருந்துகள் செய்யப்படுவது அதன் சிறப்பு. இம்முறையில் நரம்புக் கூட்டங்களை சரி செய்யவும் மூளை வளர்ச்சியின்மையால் ஐம்புலன்களிலும் ஏற்படும். பாதிப்புகளை சரி செய்யவும் நரம்புகளின் இயக்கங்களைச் சரி செய்யவும் கூடிய உள் மருந்துகளும் வெளியே பயன்படுத்தும் புற மருத்துவ சிகிச்சை முறைகளும் உள்ளன.
உடல் வளர்ச்சி குறைவு:
_ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்
_ சரியாக சாப்பிடாமல் இருப்பது.
போன்ற பிரச்னைகளுக்கு உடலின் ஏழு தாதுக்களையும் வன்மைபடுத்தக்கூடிய வகையில் ஒரு முழுமையான பார்வையில்(Holistic) சித்த மருத்துவத்தில் நல்ல சிகிச்சையை அளிக்க முடியும்.
தடுப்பூசி போல
நோய்கள் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி (Vaccine) போடுவது போல நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சில மருந்துகளை எல்லா குழந்தைகளுக்கும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.