சித்த மருத்துவம்

Main Menu

  • முதல் பக்கம்
  • டாக்டரை பற்றி
  • சித்தா பற்றி
  • சர்க்கரை நோய்
  • நோய்கள்
  • நோய் தடுப்பு
  • முகவரி
  • புத்தகம்

logo

Header Banner

சித்த மருத்துவம்

  • முதல் பக்கம்
  • டாக்டரை பற்றி
  • சித்தா பற்றி
  • சர்க்கரை நோய்
  • நோய்கள்
  • நோய் தடுப்பு
  • முகவரி
  • புத்தகம்
  • முகப்பரு

  • என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

  • சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

  • மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

  • கல்லீரல் நோய்கள்

நோய்கள்
Home›நோய்கள்›கூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும், முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு….

கூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும், முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு….

By Dr. JEROME XAVIER
September 11, 2018
584
0
Share this:

ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் ‘‘சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது’’ என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ள முடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டியநிலை ஏற்பட்டதாம்.இது ஒரு புகழ்பெற்ற உவமைக் கதை.

மூட்டுவலிகளும் இந்த ஒட்டகம் போலத்தான். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்
கொண்டால் குணமாக்கி விடலாம். அல்லது அதனுடன் போராடவேண்டியிருக்கும்.உண்மையில் மூட்டுவலிகளைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மூட்டுவலிகளைப் பற்றி முழுமையாக புரியவைப்பதும் சற்று
சிரமம்தான். ஏனென்றால் நோய்க்கான காரணங்கள், நோயினால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்புகள் என்பவை பலவகைப்படுகின்றன. ஆனால் எல்லாவிதமான மூட்டுவலிகளிலும் நோயாளிகள் ஒருசேர சொல்லும். ஒரே விளக்கம் ‘‘மூட்டு வலிக்கிறது’’ என்பதுதான். மேலும் இன்னொன்றையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ‘‘வலி மாத்திரை’’ போட்டால் வலி குறைந்துவிடுகிறது என்பதுதான். ஆனால் மூட்டுவலிகள் பல்வேறு காரணங்களால் வருகின்றன.

இவற்றை முழுமையாக இங்கே விளக்க முடியாது. ஆகவே முடிந்தவரை மிக சுருக்கமாக விளக்குகிறேன். ஒவ்வொரு விதமான மூட்டுவலியையும் பற்றி தனியாக ஒரு கட்டுரை
எழுதலாம். ஆனால் இந்த அளவுக்கு புரிதல் பரவினால் கூட போதும். அதுவே பெரிய விடயம் என நான் நினைக்கிறேன்.

மூட்டு வலிகளுக்கான காரணங்கள்:

  • பொதுவாக வயதாவதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் (Degenerative Arthritis)
  • மூட்டுகளில் உள்ள இணைப்புத் திசுக்கைகளில் ஏற்படும் வீக்கம்.
  • மூட்டுகளில் ஏற்படும கிருமித் தொற்று(Infective Arthritis)
  • நரம்புகள் பாதிக்கப்படுவதால் வரும் மூட்டுவலிகள்(NeuropathicArthritis)
  • உடலின் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் மூட்டுவலிகள்
  • இர த் த த்தில் ஏற்படும் கே £ளாறுகளால் உண்டாகும்மூட்டுவலிகள்.(Metabolic Arthritis)
  • வேறு சில நோய்களால் ஏற்படும் மூட்டுவலிகள்.

எத்தனை விதமான காரணங்களால் மூட்டுவலிகள் ஏற்படுகின்றன என்பதை புரிய வைப்பதற்காக மிக மிக சுருக்கமன வகைப்பாட்டினை மேலே குறிப்பிட்டுள்ளேன். அதாவது மூட்டுவலி என்பது மூட்டில் மட்டுமே ஏற்படும் பிரச்னை அல்ல. பல்வேறு உடல் காரணங்களால் மூட்டில் வலி தெரிகிறது. இந்த உடல் மாற்றங்களுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன? அதாவது மூட்டில் எலும்பின் அடர்த்தி குறைந்து போவதற்கான (ளிstமீஷீஜீஷீக்ஷீஷீsவீs) அடிப்படை காரணம் என்ன?

மூட்டில் உள்ள இணைப்பு திசுக்கள் வீங்குவதற்கு அடிப்படை காரணம் என்ன?
சில உப்புகள் மூட்டுகளில் வந்து தங்கி வீக்கத்தை ஏற்படுத்துவதற்குஅடிப்படை காரணம் என்ன?
இரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு அடிப்படை காரணம்என்ன?
நரம்புகள் பாதிக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் என்ன?

இந்த அடிப்படை காரணத்தைத் தெரிந்து கொள்வதற்கு உடலின்
மூன்று அடிப்படை இயக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலின் மூன்று அடிப்படை இயக்கங்கள்

1. வாதம்

2. பித்தம்

3. கபம்

வாதம் என்பதுதான் எல்லா உணர்வுகளுக்கும் காரணம். மூட்டுகளில வீக்கம் குத்துவது, வலி, குடைதல், செயலிழப்பு, நடுக்கம், மரத்துப்போதல் ஆகிய எல்லா உணர்வுகளுக்கும் வாதத்தின் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளே காரணம். அதாவது மூட்டுகளில் ஏற்படும் வாதத்தின் பிரச்னைகள் என்ற பொருள்படும் விதத்தில் ‘கீல்வாயு’ என மூட்டுவலிகளை அழைக்கிறது சித்த மருத்துவம். மேலும் ஒரு மனிதனின் வாழ்நாளை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொண்டால், முதல் மூன்றில் ஒரு பங்கு காலத்தில் கபத்தில் ஆதிக்கமும், நடு மூன்றில் ஒரு பங்கு காலத்தில் பித்தத்தின் ஆதிக்கமும், கடைசி மூன்றில் ஒரு பங்கு காலத்தில் வாதத்தின் ஆதிக்கமும் இருக்கும். எனவே இயல்பாகவே வாதத்தின் இருப்பிடமாகிய மூட்டு மற்றும் நரம்பு
சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வயதான காலத்தில் ஏற்படுவதற்கானவாய்ப்புகள் அதிகம்.
கீல் என்றால் மூட்டுகள், வாயு என்றால் வாதம் எனவேதான் இந்த வாதத்தில் ஏற்படும் பாதிப்பின் அடிப்படையில் சித்த மருத்துவம் மூட்டு வலிகளை வகைப்படுத்தியுள்ளது.

மூட்டு வலிகளின் வகைகள்:

1. வளிக் கீல் வாயு
2. பித்த கீல் வாயு
3. ஐயக் கீல் வாயு
4. வளித்தீக் கீல் வாயு
5. வளி ஐயக் கீல் வாயு
6. தீ வளிக் கீல் வாயு
7. தீ ஐயக் கீல் வாயு
8. ஐ வளிக் கீல் வாயு
9. ஐ தீக் கீல் வாயு
10. முக்குற்ற கீல் வாயு

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மூட்டுவலிகள். இவைகளின் குறிகுணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடும். அதேபோலஇவற்றின் சிகிச்சை முறைகளும் ஒன்றுக்கொன்று மாறுபடும்.

சிகிச்சை முறைகள்:

1. வாதத்தை சரி செய்ய பேதிக்கு கொடுப்பது அவசியம். பேதிக்கு கொடுத்தே மருத்துவம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். யாருக்கு என்ன விதமான பேதி மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை அவரவருடைய நாடியைத் தெரிந்து கொடுக்க வேண்டும். மேலும் உடலின் வலிமை,நோயின் தீவிரம் ஆகியவற்றையும் தெரிந்து பேதிக்கு கொடுக்க வேண்டும். இவையெல்லாம் செய்யாமல் மருத்துவம் செய்வதால்தான் மூட்டுவலிகள் குணமாகாமல் ஒரு தொடர்கதையாக பலருக்கு உள்ளன.
2. உள் மருந்துகள்
3. புற சிகிச்சை
_ தொக்கணம்(Therapeutic massage)
_ ஒற்றடம்(fomentation)

_ பற்று

போன்ற புறசிகிச்சை முறைகளும் மூட்டுகளில் அவசியம். இதிலும் வாதநோயாளிக்கு என்ன மாதிரியான புறசிகிச்சையைத் தேர்வுசெய்ய வேண்டும். பித்த நோயாளிக்கு என்ன புற சிகிச்சை, கப நோயாளிக்கு என்ன புறசிகிச்சை என்பதை அவர்களுடைய நாடிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

உண்மையில் மூட்டு வலிகளை குணமாக்குவது ஒரு கலையே. சிகிச்சை முறை சரி, மூட்டுவலிகளில் அதைவிட முக்கியமாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது ஒன்று உள்ளது. அதாவது ஒட்டகத்தை கூடாரத்தின் உள்ளே வரவிடாமல் தடுப்பது எப்படி?

வாதத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கான உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்வியல் மருத்துவ முறைகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எந்த மருத்துவரை பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கென்று ஏற்கனவே ஒரு குடும்ப மருத்துவர் இருந்தாலும் சரி, ஒரு சித்த மருத்துவரை உங்கள் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்வது எப்போதுமே நல்லது. ஏனென்றால், நமது தட்பவெப்பம், பருவநிலைகள்,
உணவு ஆகியவற்றின் அடிப்படையில் நோய்கள் வராமல் தடுப்பதற்கான சரியான அறிவுரைகள் சித்த மருத்துவர்களிடையே உள்ளன. (சித்த மருத்துவர்கள் என்ற பெயரில் இருக்கும் போலி மருத்துவர்களை அடையாளம் காணுங்கள்)
எல்லா நோய்களையும் வரும்முன் காப்பதுதான் சரி. அதிலும் மூட்டுவலிகளை ஆரம்பத்திலேயே தீவிர சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.

மூட்டு வலிகள்

தவிர்க்க வேண்டியவை:

  • புளி
  • கிழங்கு வகைகள்

சேர்க்க வேண்டியவை:

  • முடக்கறுத்தான் கீரை
  • பிரண்டை
  • முருங்கைக்கீரை
  • அகத்திக்கீரை
  • பசலைக்கீரை
  • வெந்தயக்கீரை
  • வாழைத்தண்டு
  • நீர்க்காய்கறிகள் (சுரை, பீர்க்கு,புடலை)
  • இஞ்சி
  • முளை கட்டிய பயறு வகைகள்
  • பூண்டு
  • ராகி
  • வெந்தயம்
  • சீரகம்
  • சின்ன வெங்காயம்
  • பேரீச்சை
  • உலர் திராட்சை
  • பால்
  • நண்டு
  • கொள்ளு
  • வெங்காயத்தாள்
  • மீன்

செயல்கள்

தவிர்க்க:

  • அதிக குளிர் இடத்திலிருத்தல்

யோகாசனம்:

  • பவனமுக்தாசனம்
  • கழுத்து வலி
  • உணவு

சேர்க்க வேண்டியவை:

  • கால்சியம் சத்து, புரதம் நிறைந்த
  • காய்கறிகள்
  • கீரைகள்
  • பழங்கள்
  • பால்
  • முட்டை
  • இறைச்சி
  • மீன்

தவிர்க்க வேண்டியவை:

  • எலும்பு தேய்மானத்தை
  • ஏற்படுத்தும் உணவுகள்:
  • பதப்படுத்தப்பட்ட உணவு
  • துரித உணவு
  • குளிர்பானங்கள்

செயல்கள்:

தவிர்க்க வேண்டியவை:

  • தொடர்ந்து அல்லது படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்த்தல்
  • தலையை குனிந்து கொண்டு அதிக நேரம் வேலை செய்தல்
  • தலையணை அதிக உயரமாக வைத்தல்
  • தலையில் வைத்து அதிக எடை கொண்ட பொருள் தூக்குதல்
  • பேருந்து போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது உட்கார்நத படி தூங்குதல்

செய்ய வேண்டியவை:

  • நேராக நிமிர்ந்து அமர்ந்திருத்தல்
  • கணினியில் வேலை செய்யும் போது இடையிடையே சற்று ஓய்வு எடுத்தல்
  • கணினி திரை கண்களுக்கு நேராக இருக்கும்படி செய்தல்
  • உடற்பயிற்சி செய்தல்

யோகாசனம்:

  • புஜங்காசனம் சுப்தவஜ்ராசனம் மச்சாசனம் மகராசனம்
  • கோமுகாசனம்

செயல்கள்
தவிர்க்க வேண்டியவை:

  • புகை பிடித்தல் tமது அருந்துதல்
  • அதிக எடை தூக்குதல்
  • ஹை_ஹீல்ஸ் செருப்பு அணிதல்
  • பலமாகத்தும்முதல்
  • சமனில்லாத இடத்தில் படுத்து உறங்குதல்
  • உடலை அதிகம் வளைத்து குனிதல்
  • இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணம் செய்தல்

செய்ய வேண்டியவை:

  • கூன் விழாமல் நிமிர்ந்து நடத்தல்
  • பேருந்து பயணத்தில் நடுவில் உள்ள இருக்கையில் அமர்தல்
  • எடை உள்ள பொருட்களைத் தூக்கும்போது
  • முழங்காலை மடக்கி தூக்குதல்
  • தரையை துடைக்க நீண்ட துடைப்பம் பயன்படுத்துதல்
  • தேவையான உடற்பயிற்சி செய்தல்

யோகாசனம்:

  • தடாசனம் திரியக தடாசனம் கட்டி
  • சக்ராசனம் சுப்த வஜ்ராசனம் மகராசனம்
Previous Article

உணவும் உடல் பருமனும் நோய்களும்

Next Article

உணவு

Related articles More from author

  • நோய்கள்

    எத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்துமா குணமாவதில்லை?

    September 6, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்.

    September 12, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    இரத்தக் கொதிப்பு

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    உலகையே பாடாய்ப் படுத்தும் உடல் உறுப்பு

    September 5, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

    October 1, 2018
    By Dr. JEROME XAVIER
  • நோய்கள்

    நரம்பு நோய்கள்

    September 9, 2018
    By Dr. JEROME XAVIER

Leave a reply Cancel reply

  • நோய்கள்

    முகப்பரு

  • சர்க்கரை நோய்

    Diabetes and Hypertension – சர்க்கரை நோயுடன் இரத்தக்கொதிப்பு

  • நோய்கள்

    இரத்த அழுத்தம்

Latest Articles

சர்க்கரை நோய்

இளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES

  • வாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள்தானா? – NEED TO TAKE SAME MEDICINES LIFE LONG?

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • நோய் வேறு நோயாளி வேறு – PATIENT DIFFER FROM DISEASE

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மருந்துதானா? – DO ALL NEED SAME MEDICINES ?

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018
  • உங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT

    By Dr. JEROME XAVIER
    September 5, 2018

Timeline

  • October 1, 2018

    முகப்பரு

  • October 1, 2018

    என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?

  • October 1, 2018

    சித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha

  • October 1, 2018

    மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை

  • October 1, 2018

    கல்லீரல் நோய்கள்

Get in touch

Dr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S ., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 94443 17293
E-mail id:drjeromexavier@gmail.com

Books

  • சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ₹260.00
  • சித்த மருத்துவ ஜன்னல் ₹190.00

Facebook

Dr. Jerome Xavier's Siddha Clinic
  • Call Us: +91 94443 17293
  • Mail Us: drjeromexavier@gmail.com
© Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D 2016 . All Rights Reserved.