ஆண்கள் நோய்கள்

ஆண்கள் நோய்கள்:
_ ஆண்மைக்குறைவு
_ புரஸ்தகோள வீக்கம் (BPH)
புரஸ்தகோளத்தின் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி, சிறுநீர் செல்வது தடைபடும் சிக்கல் உருவாகிறது. இதனால் சிரமப்பட்டு சிறுநீர் கழித்தல், வலியுடன் கூடி சிறுநீர் கழித்தல் சிறுநீர் தங்கல் அதனால் ஏற்படும் அழற்சி போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. ஆண்களில் 50 வயதில் 50% பேருக்கும் 80 வயதில் 75% பேருக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை இல்லாமல் சித்த மருத்துவத்தில் உள் மருந்துகள் மூலமாகவே இந்நோயை சரி செய்யலாம். ஆண்மைக் குறைவு: இரண்டு வகையான பிரச்னைகளை ஆண்மைக்குறைவு என பொதுவாக குறிப்பிட்டு விடுகின்றனர்.
1. விந்தணுக்களில் பிரச்னை
2. ஆண்குறி விரைப்புத்தன்மையின்மை
ஆனால் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான பிரச்னைகள் இரண்டிற்குமான தீர்வுகளும் வெவ்வேறானவை. விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் வீரியம், விந்து நீரின் அளவு விந்தணு உற்பத்தி போன்றவற்றை அதிகரிக்கக் கூடிய நல்ல மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. அதேபோல விரைப்புத்தன்மையை அதிகரிக்கக்கூடிய மருந்துகளும் சித்த மருத்துவத்தில் அநேகம் உள்ளன. மு¬யான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைக்குப் பின் போதுமான கால அளவிற்கு மருந்து எடுத்துக் கொள்வதால் நல்ல பயனை அடையலாம்.